வி.ஜே.விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அன்ஷிதா வெளியிட்ட போஸ்ட்.. வைரல் பதிவு
பிக் பாஸ்
விஜய் டிவியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த 8 - வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ட்விஸ்ட் வைக்கப்பட்டு டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சௌந்தர்யா இரண்டாம் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை விஷால் பிடித்து கொண்டார்.
வி.ஜே. விஷால் - அன்ஷிதா
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான வி.ஜே. விஷால் மற்றும் அன்ஷிதா நல்ல நண்பர்களாக சுற்றி வந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று இணையத்தில் தொடர்ந்து பேச்சுகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், வி.ஜே. விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அன்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.