குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள்.. அப்போ சம்பவம் உறுதி
குக் வித் கோமாளி 5
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 இந்த ஆண்டு சில தாமதமாக துவங்கவுள்ளது.
சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்த நிறுவனம் மீடியா மேசன்ஸ், இயக்குனர் பார்த்திபன் மற்றும் செப் வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
செப் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக பிரபல நடிகரும், சமையல் கலையில் வல்லுனராக இருந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார். சமீபத்தில் கூட இதற்கான ப்ரோமோ வெளிவந்திருந்தது.
போட்டியாளர்களின் லிஸ்ட்
குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்கள் குறித்து தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் Youtuber இர்பான், விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, ஷபி ஷப்னம், தொகுப்பாளினி ஜாக்குலின் உள்ளிட்டோரின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் பிரபலங்கள்
இந்த பட்டியலில் பிக் பாஸ் 7 பிரபலங்கள் தினேஷ் மற்றும் பூர்ணிமாவும் இணைந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெவ்வேறு குரூப்பில் மோதிக்கொண்டு இருந்த தினேஷ் மற்றும் பூர்ணிமா இவர்கள் இருவரும் குக் வித் கோமாளி 5ல் போட்டியாளராக களமிறங்க அதிக வாய்ப்புகள் என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
