புதியதாக கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புதிய ஜோடி அமீர்-பாவ்னி- இதோ காருடன் அவர்கள் எடுத்த போட்டோ
அமீர்-பாவ்னி
பிக்பாஸ் 5வது சீசனில் சீரியல் நடிகையாக நிகழ்ச்சிக்குள் வந்தவர் பாவ்னி. இவர் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார். அது பலருக்கும் மிகவும் கஷ்டத்தை கொடுத்தது.
ஆனால் நிகழ்ச்சியை முடித்து வெளியே வரும்போது கொஞ்சம் சந்தோஷத்துடன் தான் வெளியே வந்தார். பிக்பாஸ் 5வது சீசனில் மக்கள் பலருக்கும் அறிமுகம் இல்லாதவராக வந்தவர் நடன கலைஞர் அமீர்.
இப்போது இவர்கள் இருவரையும் தெரியாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தங்களது சிறப்பான நடனத்தை வெளிக்காட்டி வந்தார்கள், டைட்டிலையும் வென்றார்கள், காதலர்களாகவும் ஆனார்கள்.
புதிய கார்
இவர்களது திருமண பேச்சுக்கள் நடக்கும் இந்த நேரத்தில் இருவரும் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். அந்த காருடன் அமீர்-பாவ்னி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
கணவருடன் ரொமான்டிக்கான இடத்தில் சாப்பாடு சாப்பிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- இதோ புகைப்படம்