பிக்பாஸ் பிரபலங்கள் அமீர்-பாவ்னி திருமணம் எப்போது?- முதன்முறையாக அவர்களே கூறிய தகவல்
பிக்பாஸ் 5வது சீசன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஜோடி இணைவது வழக்கம். அப்படி பிக்பாஸ் 5வது சீசன் மூலம் ரியல் ஜோடியாக ஆனவர்கள் அமீர் மற்றும் பாவனி.
இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து அவரவர் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதேபோல் இருவரும் இணைந்து நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார்கள், அண்மையில் இருவரும் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார்கள்.
பேட்டி கொடுத்த பிரபலம்
இன்று காதலர் தினம், இன்றைய தினத்தின் ஸ்பெஷலாக இருவரும் பேட்டி கொடுத்துள்ளார்கள்.
அதில் பாவ்னி பேசும்போது, எனக்கு விரைவில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்பத் தலைவியாக குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று ஆசை, அந்த நாள் விரைவில் வரும் என பாவனி தெரிவித்துள்ளார்.
நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதி, ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்வோம், திருமணத்திற்கு முன்பு எங்கள் துறையில் சாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?