கணவருடன் வெளிநாட்டு டூர் கிளம்பிய பிக்பாஸ் புகழ் தாமரை... மொத்தமாக மாறிய நடிகை
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு கொடுத்ததா என்றால் சந்தேகம் தான்.
ஆனால் சிலருக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும். அதற்கு உதாரணமாக இப்போது பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த தாமரையை கூறலாம்.
கூத்துகட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தவருக்கு பிக்பாஸ் அவர்களது எதிர்க்காலத்தை மாற்றியது.
இப்போது நிறைய சீரியல்கள், தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு வந்தவர் சொந்தமாக யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் சம்பாதித்து வருகிறார்.
தற்போது விஜய்யில் சின்ன மருமகள் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
புதிய லுக்
வாழ்க்கையில் சரியாக வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த தாமரை வாழ்க்கை மாறியது அனைவருக்கும் சந்தோஷம் தான்.
இந்த நிலையில் தாமரை தனது கணவருடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு டூர் கிளம்பியுள்ளார்.
புடவையில் கலக்கிவந்த தாமரை செம மாடனாக விமான நிலையத்தில் கணவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அட நம்ம தாமரையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.