ஜனனி
பிக் பாஸ் ஷோவில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் பாதியிலேயே வெளியேறினாலும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்து இருக்கிறது.
மேலும் அவர் தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி67 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி அவரே இன்று பிக் பாஸ் 6 பைனலில் பேசி இருக்கிறார்.
விஜய் 67
"நிறைய மக்களுக்கு என்னை தெரியவேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அது நடந்துவிட்டது. மக்கள் நிறைய அன்பு கொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு நன்றி. அவங்க வீட்டு பிள்ளை போல என்னை பார்கிறார்கள். நான் வந்த வேலை முடிந்துவிட்டது" என ஜனனி கூறினார்.
மேலும் ஊருக்கு (இலங்கைக்கு) போனீங்களா என கமல் கேட்க, 'இல்லை' என பதில் கூறினார் ஜனனி.
"வீட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு இங்க வாய்ப்பு வந்துருக்குல இங்க உங்களுக்கு" என கமல் மறைமுகமாக விஜய் 67 படம் பற்றி கேட்க, "ஆமா சார்" என கூறினார்.
கையில் கட்டுடன் வந்த போட்டியாளர்! பிக் பாஸ் 6 பைனலில் என்ன நடந்தது?

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
