லியோ
விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். ஜனவரி 2ம் தேதியே பூஜை உடன் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. அதன் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தனர்.
அதன் பின் படக்குழு காஷ்மீருக்கு சென்ற நிலையில் அங்கு கடும் குளிரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தில் அர்ஜுன், கௌதம் மேனன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் ஜனனி ரோல்..
பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆன இலங்கை பெண் ஜனனியும் லியோ படத்தில் நடிக்கிறார். ஆனால் அவரது ரோல் என்ன என்பது பற்றிய விவரம் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் அவர் விஜய்யின் மகளாக தான் லியோ படத்தில் நடிக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. ஜனனி சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது அது பற்றி கேட்டிருக்கின்றனர். ஆனால் 'அது சீக்ரெட்' என மட்டும் அவர் கூறி இருக்கிறார்.



தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri