பிக் பாஸ் நிகழ்ச்சியின் லான்ச் எபிசோட் TRP ரேட்டிங்.. இதோ பாருங்க
பிக் பாஸ் 7
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரமாண்டமாக துவங்கப்பட்டது.
இதில் விஷ்ணு, பவா செல்லத்துரை, விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பிரதீப், ஜோவிகா, அனன்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த வாரம் மக்களால் வெளியேற்றப்பட்டனர் அனன்யா.
ஆனால், தன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை என கூறி தானே முன் வந்து கூறி வீட்டிலிருந்து வெளியேறினார் பவா செல்லத்துரை. பவா செல்லத்துரை வெளியேறியதன் காரணமாக இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
TRP ரேட்டிங்
இந்நிலையில், பிக் பாஸ் லான்ச் எபிசோடின் TRP ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் லான்ச் எபிசோட் 6.35 ரேட்டிங் பெற்றுள்ளது.
இது லான்ச் எபிசோடின் ரேட்டிங் மட்டுமே, முதல் வார ரேட்டிங் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.