இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைய ஆசைப்படும் பிக் பாஸ் போட்டியாளர்.. நிறைவேற்றுவாரா விஜய் சேதுபதி
பிக் பாஸ்
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் உள்ளனர்.
இன்னும் 5 வாரங்கள் உள்ள நிலையில், யார் அந்த ஒருவர் கோப்பையை தட்டி செல்லப்போகிறார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமாகியுள்ள நபர்களில் ஒருவர் முத்துக்குமரன். தொகுப்பாளராக இருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்துள்ளது.
முத்துக்குமரன் ஆசை
இந்த நிலையில், முக்கிய போட்டியாளராக இருக்கும் முத்துக்குமரன், பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிய விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதில் "இந்த நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து, சேது அண்ணனிடம் உரிமையுடன் கேட்க வாய்ப்பு ஏற்பட்டால், ஒரே ஒரு விஷயம் தான் கேட்பேன். இயக்குனர் வெற்றிமாறனிடம் சினிமாவை கற்றுக்கொள்ள சேர்த்து விடுவீர்களா என கேட்க நினைத்தேன், என்று சாச்சனாவிடம் சொன்னேன்" என முத்து பேசியுள்ளார்.
முத்துகுமரனின் இந்த ஆசையை விஜய் சேதுபதி நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
#Muthu eagerly wants to join as Ad to vetrimaran sir's unit 🫣🔥.!#Muthukumaran #BiggBoss #BiggBossTamil8 #BiggBossSeason8Tamil #BiggBossTamil8Season pic.twitter.com/Ku4moaMIK9
— Bigiluuu 👀💥 (@Bigileyyy) December 16, 2024

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
