நடிகர் மன்சூர் அலிகானுடன் நிகழ்ச்சியில் ஜாலியாக ஆட்டம் போட்ட தொகுப்பாளினி பிரியங்கா- கலக்கல் வீடியோ
மன்சூர் அலிகான்
படங்கள் சமீப காலமாக அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் ஏதாவது ஒரு விஷயத்தால் செய்திகளில் இருந்துகொண்டே இருப்பவர் நடிகர் மன்சூர் அலிகான்.
சமீபத்தில் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். பின் அவர் வாழ்ந்து வரும் வீட்டில் பாதி புறம்போக்கு நிலம் என்று புகார் அந்த பிரச்சனையால் இப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.
இதனிடையில் அவர் ஆனந்த் ராஜ் இயக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கின்றனர்.
ராஜு வூட்டுல பார்ட்டி
பிக்பஸ் 5வது சீசன் வின்னர் ராஜு தொகுத்து வழங்க ராஜு வூட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் புதிய நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொள்ள இருக்கிறார்.
நிகழ்ச்சியின் புரொமோவில் எல்லோரையும் கலாட்டா செய்யும் மன்சூர் அலிகான் அப்படி ஒரு ஆட்டம் போட்டுள்ளார், அனைவரையும் திணற வைத்துள்ளார். தற்போது அந்த புரொமோ தான் வைரலாகி வருகிறது.
முதல் நாளில் அதிரடி வசூல் வேட்டை நடத்திய சிம்புவின் வெந்து தணிந்தது காடு- முழு தகவல்