முதல் நாளில் அதிரடி வசூல் வேட்டை நடத்திய சிம்புவின் வெந்து தணிந்தது காடு- முழு தகவல்
வெந்து தணிந்தது காடு
சிம்புவின் திரைப்பயணத்தில் கௌதம் மேனனுடன் இணைந்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இப்போது சிம்பு-கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் என 3 பிரபலங்கள் இணைய நேற்று வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு.
இந்த படத்திற்காக சிம்பு நிறைய உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக இப்பட தயாரிப்பாளர் இசாரி கணேஷ் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.
ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
முதல் நாள் வசூல்
படு பிரம்மாண்டமாக வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 15 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். படம் அடுத்தடுத்த நாளும் நல்ல வசூல் வேட்டை செய்யும் என்கின்றனர்.
நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
