சென்னையை அசிங்கப்படுத்தினாரா பிக் பாஸ் ராஜு? சர்ச்சைக்கு மன்னிப்பு
பிக் பாஸ் 5ம் சீசன் டைட்டில் ஜெயித்தவர் ராஜு. அவர் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
ராஜு சர்ச்சை
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு ராஜு திரைப்படங்களுக்கு செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் விஜய் டிவியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ராஜு வூட்ல பார்ட்டி என்ற காமெடி ஷோவை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் 2 பைனலில் ராஜுவும் கலந்துகொண்டார். அந்த ஷோவுக்கு பிரம்மாஸ்திரா படத்தை ப்ரோமோட் செய்ய ரன்பீர் கபூர், நாகர்ஜுனா மற்றும் ராஜமௌலி ஆகியோர் வந்தனர்.
அப்போது ராஜு ரன்பீருக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருக்கும் ஸ்லாங்குகள் பற்றி சொன்னார். 'சென்னை ஹாட் ஆன இடம், எல்லோரும் எப்போது இரிடேட்டட் ஆகவே இருப்பாங்க' , 'மதுரை ஒரு ஹை place, எப்போதும் பாதையிலே இருப்பாங்க' என ராஜு கூறினார்.
சென்னை மக்கள் இரிடேட்டிங்கா?அப்புறம் நீரு எதுக்கு சென்னை வந்தீரு, pic.twitter.com/IW9GGhkzl9
— லொள்ளு மன்னன் ? (@sridharsampath6) September 8, 2022
Madurai karanga na kudichute irupangala? Mentals
— நந்தினி ✩✩ ? ???????? ? ✩✩ (@nandhinithinks) September 8, 2022
Yen da Tamil natta kevala paduthuringa?
மன்னிப்பு கேட்ட ராஜு
தமிழ்நாட்டை பற்றி இவ்வளவு கேவலமாக யாரும் ஒரு ஹிந்தி நடிகருக்கு அறிமுகம் செய்ய முடியாது என அதிகம் பேர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் ராஜு ட்விட்டரில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
"திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சணம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்க்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும்??#Madras" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சணம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்க்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும்??#Madras
— Raju Jeyamohan (@rajuactor91) September 8, 2022
ஆல்யா மானசா, அர்ச்சனாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து இந்த பிரபலமும் விலகுகிறாரா?