ஆல்யா மானசா, அர்ச்சனாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து இந்த பிரபலமும் விலகுகிறாரா?
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க ராஜா ராணி 2 என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தொடரில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய நடிகர்களாக முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.
ஆனால் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலகினார், அவருக்கு பதில் ரியா நடித்து வருகிறார்.
சமீபத்தில் தொடரில் இருந்து வில்லியாக நடித்துவந்த அர்ச்சனா விலகினார், ஆனால் அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
இப்படி இதுவரை தொடரில் இருந்து 2 பேர் விலகிவிட்டார்கள்.

சீரியலில் இருந்து விலகும் பிரபலம்
தற்போது சமூக வலைதளங்களில் இதில் நாயகனாக நடிக்கும் சித்து தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வர ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் வெளியேறும் முடிவே எடுக்கவில்லையாம்.
புதிய பட வாய்ப்பு தான் இப்போது அவருக்கு வந்துள்ளதாம், இதனால் தொடரில் இருந்து அவர் விலகுவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.

சுத்தமாக Washout ஆன விக்ரமின் கோப்ரா- இப்படி ஒரு நிலைமையா?
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu