பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக நுழையும் குக் வித் கோமாளியின் முக்கிய பிரபலம், யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிப்பரபாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடைசியாக நடந்து முடிந்தது.
மக்களிடையே வரவேற்பை பெற்ற கடந்த சீசனில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனான பிக்பாஸ் 6 குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரக்ஷன் கடந்த பிக்பாஸ் சீசன்-ல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் 6-ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.
மேலும் கடந்த சீசன் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தாமதாக தொடங்கப்பட்டது, ஆனால் இந்த சீசன் எப்போதும் போல் அக்டோபர் மாதன் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
