விரைவில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரை சந்திக்கும் இயக்குநர் லோகேஷ் ! இணையுமா பிரம்மாண்ட கூட்டணி..
விக்ரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராகியுள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகள் புரிந்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.
அதன்படி அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த அப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.

மகேஷ் பாபுவின் டீவிட்
இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தை பார்த்துள்ள தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு புகழ்ந்து தள்ளி டீவிட்டரில் பதிவிட்டுள்ளார். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் உள்ளிட்டோர் குறித்து புகழ்ந்து பேசியுள்ள மகேஷ் பாபு.
இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் விக்ரம் திரைப்படம் உருவான விதம் குறித்து விவாதிக்க அர்வமுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் லோகேஷ் “ரொம்ப நன்றி சார், நானும் விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன் சார்” என பதிவிட்டுள்ளார்.
இதனால் தற்போது ரசிகர்கள் மகேஷ் பாபு - லோகேஷ் கனகராஜ் கூட்டணி விரைவில் எதிர்பார்க்கலாம் என இணையத்தில் பேசிவருகின்றனர்.

இரன்டாவது நாள் யானை இத்தனை கோடி வசூலா, அருண்விஜய் விஸ்வரூப வளர்ச்சி
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri