துவங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. எப்போது ஒளிபரப்பு தெரியுமா
விஜய் டிவியின் பிக் பாஸ்
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
அதில் கடந்த ஐந்தாவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் மக்களிடமிருந்து அதிக வாக்குகளை பெற்று ராஜு டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்.
சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடி-யில் மட்டுமே ஒளிபரப்பானது. ஆனால், பெரிதளவில் ரீச் கிடைக்கவில்லை.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 எப்போது துவங்கும் என்று தான், ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜூலை மாதம் நடுவே அல்லது ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 6 துவங்கும் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
Bigg boss tamil season 6 to be expected by July mid or august#biggbossTamil #biggbosstamil6
— Imadh (@MSimath) May 21, 2022