அனைவரும் எதிர்பார்த்துள்ள பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதி எப்போது தெரியுமா?
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.
மேலும் சமீபத்தில் கூட கமலின் அதிரடியான விக்ரம் பட பாணி டயலாக் உடன் ப்ரோமோ வெளியானது.
தொடங்கும் தேதி
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கவுள்ள தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம், பிக்பாஸ் 6 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதன்படி ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தொகுப்பாளினி டிடி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தகவல் பரவின.
அம்மா பெயரை கெடுத்துட்டாங்க - பிக்பாஸ் தமிழ் குறித்து ஸாராவின் கடுமையான விமர்சனம்