பிக் பாஸ் 6ன் டைட்டில் வின்னர் இவர் தானா.. இரண்டாவது நாள் முடிவதற்குள் வெளிவந்த ரிசல்ட்
பிக் பாஸ் 6
கமல் ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் 6 கடந்த 9ஆம் தேதி ஆரம்பம் ஆனது. இதில் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பொது மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட கலந்துகொண்டுள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்த சில மணி நேரங்களிலேயே போட்டியாளர்களுக்கு டாஸ்குகளை கொடுக்க பிக் பாஸ் துவங்கிவிட்டார். இதில் தற்போது முதல் வாரத்திற்கான Luxury பட்ஜெட் டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக 20 போட்டியாளர்கள் நான்கு அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள்.
டைட்டில் வின்னர்
இரண்டு நாட்கள் கூட முடிவடையாத நிலையில், தற்போது பிக் பாஸ் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் என்று கூறி லிஸ்ட் ஒன்றி வெளியாகியுள்ளது.
அதன்படி, பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ஷிவின் கணேசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜி.பி. முத்து இரண்டாவது இடம் என்றும் மணிகண்டன் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இது உண்மையான இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் கூட இந்த லிஸ்டை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.