துவங்குகிறது பிக் பாஸ் 6.. முதல் முறையாக அறிவித்த கமல் ஹாசன்
பிக் பாஸ்
விஜய் தொலைக்காட்சியின் அடையாளமாக உள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் துவங்கிய இந்த நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து, கடந்த ஐந்தாவது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஐந்தாவது சீசனுக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சி இனிமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாது என்று ஒரு தகவல் உலா வந்தது. இதற்கு இன்று, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கமல் ஹாசன் பதிலழில்த்துள்ளார்.
உருதி செய்த கமல்
இதில், பிக் பாஸ் சீசன் 6 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், நான் தொகுத்து வழங்குவேன் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகுமா என்று சந்தேகத்தில் இருந்த பலருக்கும், கமல் ஹாசனின் பதில் ஒரு முடிவை தந்துள்ளது.
இதன்முலம் இன்னும் சில மாதங்களில் பிக் பாஸ் சீசன் 3 துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இதுகுறித்து விஜய் டிவி எப்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுகிறார்கள் என்று.