பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா
பிக் பாஸ் பைனல்
நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி என ஐந்து பைனலிஸ்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதில் யார் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ண போகிறார்கள் என்பது குறித்து நமது சினிஉலகம் பக்கத்தில் Voting Poll நடத்தப்பட்டது.
டைட்டில் வின்னர்
இதில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார் விஜே அர்ச்சனா. இதன்மூலம் அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே அர்ச்சனாவிற்கு அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மக்களிடம் இருந்து அனைவரையும் விட அதிக வரவேற்பை பெற்ற அர்ச்சனா தற்போது பிக் பாஸ் 7 டைட்டில் ஆக போகிறார் என தெரிகிறது.
அர்ச்சனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் மாயா உள்ளார். இதன்பின் மூன்றாவது இடத்தில் விஷ்ணு இருக்க, நான்காவது இடத்தில் தினேஷ் மற்றும் ஐந்தாவது இடத்தில் மணி இருக்கிறார். இதுவே சினிஉலகம் நடத்திய Voting Poll முடிவுகள் ஆகும். நாளை என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
