இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது இவர் தான்.. சினிஉலகம் நடத்திய Voting Poll Result இதோ
Voting Poll Result
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் நாமினேட் ஆகும் போட்டியாளர்கள் குறித்து நம் சினிஉலகம் சார்பில் Voting Poll நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ரசிகர்களும் அமோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.
கடந்த வாரம் சினிஉலகம் Voting Poll-லில் ரசிகர்களாகிய நீங்கள் அளித்த Voting அடிப்படையில் அன்னபாரதி வெளியேறுவார் என தெரிவித்து இருந்ததாம். அதன்படி அன்னபாரதி தான் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகவும் வெளியேற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து இந்த வாரம் நீங்கள் சினிஉலகம் Voting Poll மூலம் யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என பார்க்கலாம். இந்த வாரம் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டது.
வெளியேறப்போவது இவர் தான்
RJ Brovo, VJ அர்ச்சனா, பூர்ணிமா, ஐஷு, தினேஷ் மற்றும் விசித்திரா தான் இந்த நாமினேட் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் VJ அர்ச்சனாவிற்கு அதிகப்படியான வாக்குகள் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்துள்ளது.
அதே போல் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் 7 வீட்டிலிருந்து பூர்ணிமா தான் வெளியேற போகிறார் என சினிஉலகம் Voting Poll Result மூலம் தெரிகிறது.
இவை யாவும் சினிஉலகம் நடத்திய Voting Poll-லில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் கூறப்படும் Result தான் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் கமல் ஹாசன் கையில் இருக்கப்போவது யாருடைய பெயர் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
You May Like This Video