பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- இப்படியொரு டுவிஸ்ட்டா?
பிக்பாஸ் 6
குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என ஆரம்பித்த முதல் சீசனிற்கு கிடைத்த மாபெறும் வெற்றி இப்போது 6வது சீசன் வரை வந்துள்ளது. இப்போது 6வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த சீசனில் மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகங்கள் உள்ளனர்.
சிலர் புதியவர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இதுவரை வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என 6 பேர் வெளியேறிவிட்டார்கள்.
இதில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
எலிமினேஷன்
இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற நாமினேட் ஆனவர்கள் அசீம், ராபர்ட், மணிகண்டன், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன், ராம் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் மற்றும் ராபர்ட் தானாம். இவர்களில் மணிகண்டன் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
103 வயதுடைய விஜய்யின் பாட்டியை பார்த்துள்ளீர்களா..இதோ அழகிய தருணத்தின் புகைப்படம்