பிக் பாஸ் அல்டிமேட் புதிதாக என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் !
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட்ட நிகழ்ச்சி தொடங்கியது.
வித்தியாசமான முறையில் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் கமல் இந்நிகழ்ச்சியில் விலகியதை தொடர்ந்து சிம்பு அவருக்கு பதிலாக தொகுத்து வழங்கி வருகிறார், அவர் தொகுத்து வழங்கி வரும் முறை போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு ரம்யா பாண்டியன் Wild Card என்ட்ரி கொடுத்துள்ளார்.
லாஸ்லியா, ஷிவானி நாராயணன் வைல்ட் கார்டு என்ட்ரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் நுழைந்துள்ளார். இதோ அந்த ப்ரோமோ.