கமல் - முத்தையா கூட்டணியில் உருவாகும் திரைப்படம்! இப்படி தான் இருக்குமா..
கமலின் லைன் அப்
உலகநாயகன் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதனை ஸ்பெஷலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் பகத் பாசிலுடன் ஒரு குட்டி வீடியோவுடன் அறிவித்து இருந்தார். ]
மேலும் இப்படத்தை தொடர்ந்து கமல் இயக்குனர்கள் மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவாரா அல்லது நிறுத்தப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை.
புத்தம் புதிய கூட்டணி
இதற்கிடையே கமலின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர்களின் பட்டியலில் யாரும் எதிர்பாராத ஒரு இயக்குனர் இணைந்துள்ளார். ஆம் விருமன், குட்டி புலி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா உடன் கமல் இணையவுள்ளார்.
விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் கிராமப்புற திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம், இதற்காக தான் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.