பிக் பாஸ் வீட்டுக்கு சாப்பாடு செஞ்சு தரமுடியாது.. கடும் மோதல்.. ப்ரோமோ வீடியோ
கடும் மோதல்
கடந்த வாரம் போல் இல்லாமல் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சாப்பாட்டு விஷயத்தில் இரு வீட்டாருக்கும் இடையே இந்த மோதல் ஏற்படுகிறது. இதை சமாளிக்க முடியாமல் வீட்டின் கேப்டன் விக்ரம் சற்று தடுமாறுகிறது.
முதல் ப்ரோமோ
இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டின் நடக்கவுள்ள மோதல் குறித்து முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு செய்த்க்கொடுக்க முடியாது, நாங்கள் அனைவரும் ஸ்ட்ரைக் செய்கிறோம் என ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள நபர்கள் முடிவு எடுக்கிறார்கள்.
இதனால் கடுப்பாகும் பிக் பாஸ் வீட்டினர், தங்களுடைய உணவு பொருட்களை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மோதல் எங்கு போய் முடியப்போகிறதோ. பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ..