பிகில் திரைப்படத்தால் இத்தனை கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது ! வெளுத்து வாங்கும் பிரபலம்..
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் அவர்களே பதிவுகளை வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
இதனிடையே தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் கே.ராஜன் இவர் தொடர்ந்து பேட்டிகளில் பல முக்கிய பிரபலங்கள் குறித்து பேசிவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கோடி கணக்கில் நஷ்டம்
அந்த வகையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் நடித்து பிகில் திரைப்படம் குறித்து திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது "பிகில் படத்தால் 30 கோடி நஷ்டம்.
பெரிய ஹீரோக்கள் வாங்கும் 100 கோடியை எங்கே பதுக்கி வைக்கிறீர்கள்?. தயாரிப்பாளர்களின் ரத்தத்தை ஹீரோக்கள் உறிஞ்சுகிறீர்கள். பந்தா செய்யாமல் அடக்கமாக நடிக்க வேண்டும்" என கே.ராஜன் பேசியுள்ளார்.
இதனை Blue Sattai Maran அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், மேலும் அவர் தொடர்ந்து நடிகர் அஜித் குறித்து விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு வந்தநிலையில் தற்போது விஜய் குறித்தும் விமர்சித்துள்ளார்.