விஜய்யின் 66வது படத்தின் வில்லன் இவரா?- அட நம்ம தல கூட மோதினவரா?
இளைய தளபதி விஜய் தமிழ் மக்கள் கொண்டாடும் மிகப்பெரிய நடிகர். அவரது நடனத்திற்கு இந்திய சினிமா ரசிகர்கள் அனைவருமே பேன்ஸ் என்று தான் கூற வேண்டும்.
பீஸ்ட் பட அப்டேட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் தனது 65வது படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, வெளிநாடு என மாற்றி மாற்றி நடந்து வந்தது, படப்பிடிப்பும் ஓரளவிற்கு முடிந்துவிட்டது.
படம் குறித்து வந்த அடுத்த அப்டேட் என்னவென்றால் வரும் மார்ச் 20ம் தேதி பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கப்போகிறது என்கின்றனர்.
தளபதி 66
இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி கதைக்களத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வர சின்ன சின்ன அப்டேட்டுகள் வருகின்றன.
தற்போது படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால் விஜய்யின் 66வது படத்தின் வில்லன் விவேக் ஓபராய் என்று கூறப்படுகிறது. ஆனால் சில தகவல்கள் இப்போதைக்கு பேச்சு வார்த்தை மட்டும் தான் போய்க் கொண்டிருக்கிறது என்கின்றனர்.
வெளிநாடுகளில் அஜித்தின் வலிமை படத்தின் முழு வசூல் விவரம்- அங்கேயும் கெத்து காட்டும் தல