வெளிவந்து 11 வருடங்கள் ஆகியுள்ள பில்லா 2 படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
அஜித்தின் பில்லா 2
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பில்லா. இது ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பில்லா படத்தின் மாடர்ன் வெர்ஷன் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக நயன்தாரா நடித்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து பில்லா 2 திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக Chakri Toleti என்பவர் இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், காலப்போக்கில் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட துவங்கினார்கள்.
மொத்த வசூல்
இந்நிலையில், பில்லா 2 வெளிவந்த 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என இன்று #11YearsOfBilla2 #11YrsOfConquerorBILLA2 என ஹேஷ்டேக் மூலம் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
வெளிவந்த சமயத்தில் தோல்வியை தழுவினாலும் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பில்லா 2 திரைப்படம் மொத்தமாக செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பல விமர்சனங்களுக்கு இடையிலும் பில்லா 2 உலகளவில் ரூ. 55 கோடி வரை வசூல் செய்தது. கண்டிப்பாக இப்படம் இன்று வெளியாகியிருந்தால், கே ஜி எப் அளவிற்கு வரவேற்பை பெற்றிருக்கும் என கூறி வருகிறார்கள்.
விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா