நிஜமான பார்க்கிங் பட கதை.. நடிகர் பிர்லா போஸ் 15 வயது மகன் மீது நடந்த தாக்குதல்
கடந்த வருடம் டிசம்பரில் வெளியான பார்க்கிங் படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனைக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் இருவரும் எல்லைமீறி சண்டைபோட்டுக்கொள்வது போல தான் கதை இருக்கும்.
இந்த கதை தற்போது நிஜத்திலேயே நடந்திருக்கிறது. பிரபல சின்னத்திரை நடிகர் பிர்லா போஸ் சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்துவரும் நிலையில் பார்க்கிங் தொடர்பான பிரச்சனை பெரிய அளவில் நடந்திருக்கிறது. அது தற்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று இருக்கிறது.
பிர்லா போஸ்
சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பிர்லா போஸ். கோலங்கள், திருமதி செல்வம் தொடங்கி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் வரை பல்வேறு தொடர்களில் அவர் நடித்து இருக்கிறார்.
மேலும் படங்களிலும் குணச்சித்திர ரோல்களில் அவர் நடித்து வருகிறார். ரஜினியின் அடுத்த படமான வேட்டையன் படத்திலும் அவர் நடித்து இருக்கிறாராம்.

பார்க்கிங் சண்டை
சென்னை மதுரவாயல் பகுதியில் ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வரும் பிர்லா போஸ் மற்றும் அவரது கீழ் வீட்டில் வசிப்பவர் உடன் தான் சண்டை வந்திருக்கிறது.
கீழ் வீட்டில் குடும்பத்துடன் இருக்கும் கல்லூரி மாணவரை பார்க்க வந்த அவரது நண்பர்கள், பார்க்கிங்கில் இருக்கும் பிர்லா போஸின் காரை இடித்து சேதப்படுத்தி இருக்கின்றனர்.
இது பற்றி பிர்லா போஸுக்கும் அந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கும் வாய்த்தகராறு பெரிய அளவில் நடந்திருக்கிறது.

மகன் மீது தாக்குதல்
இந்நிலையில் சமீபத்தில் பிர்லா போஸ் மகன் டியூஷன் சென்று திரும்பும்போது அந்த கல்லூரி மாணவர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இது பற்றி போலீஸில் பிர்லா போஸ் புகார் கொடுத்து இருக்கும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவரை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தற்போது அவனது பெற்றோர் மேல் வீட்டில் இருக்கும் நடிகர் பிர்லா போஸிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்களாம்.
இருப்பினும் தனது 15 வயது மகனை தாக்கிவர்களை விடமாட்டேன் என பிர்லா போஸ் கூறிவிட்டாராம்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu
எனக்காக எல்லாவற்றையையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக.. - மலேசியாவில் விஜய் உருக்கம் IBC Tamilnadu