பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் பைசன் படம் இதுவரை செய்துள்ள வசூல்
பைசன்
துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த படம் பைசன். இப்படத்தில் அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோர் நடித்திருந்தனர்.

கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் குறித்து பார்த்து வருகிறோம்.
வசூல்
இந்த நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பைசன் படம் உலகளவில் ரூ. 62.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வாரம் முடிவு ரூ. 62.2 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri