10 நாட்களில் பிளாக் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிளாக்
தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. அதே போல் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோயின்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கடந்த 11ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிளாக். இப்படத்தை இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது.
வேட்டையன் படம் வெளிவந்து அடுத்த நாளில் பிளாக் வெளிவந்தாலும், நல்ல வசூல் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு பத்திரிகையாளர்களுடன் இணைந்து கொண்டாடினார்கள்.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களில் பிளாக் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிளாக் திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
