ரஜினியின் வேட்டையன் படத்துடன் வெளிவந்த பிளாக்.. 9 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா
பிளாக்
கடந்த வாரம் ரஜினியின் வேட்டையன் 10ஆம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் படம் வெளிவந்த அடுத்த நாள் 11ஆம் தேதி ஜீவாவின் பிளாக் திரைப்படம் வெளியானது.
இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். இப்படத்தை பாலசுப்பிரமணி என்பவர் இயக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
வித்தியாசமான கதைக்களம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் திரைக்கதை என படத்தை மிரட்டலான வகையில் எடுத்திருந்தார் இயக்குனர் பாலசுப்பிரமணி. சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
வசூல்
விமர்சன ரீதியாகவும், வசூல் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிளாக் திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
