வசூலை வாரிக்குவிக்கும் பிளாஸ்ட் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
பிளாஸ்ட்
கடந்த மே 5-ஆம் தேதி வெளிவந்த பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 21 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தில் அர்ஜுடனுடன் இணைந்து அபிராமி பல ஆண்டுகளுக்கு பின் நடித்திருந்தார். மேலும், இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆக்ஷன் ஹீரோயினாக இப்படத்தில் கலக்கியிருந்தார்.

வசூல்
கடந்த மே 28-ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட, வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில், 21 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 21 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ள பிளாஸ்ட் திரைப்படம் இம்மாதம் இறுதிக்குள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
