சிவகார்த்தியன் பிளாக் பஸ்டர் திரைப்பட இயக்குநருடன் கைகோர்க்கும் தளபதி விஜய் !
தளபதி விஜய்யின் அடுத்த இயக்குநர்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருந்தது.
அப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே விஜய் தொடர்ந்து இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை பார்த்து வருகிறார். அந்த வகையில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட இயக்குநர்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட்-ல் நடித்திருந்தார்.
மேலும் தற்போது மீண்டும் ஒரு இளம் இயக்குநருடன் பணியாற்ற இருக்கிறார் விஜய். ஆம், அதன்படி சிவகார்த்தியனின் டான் திரைப்படத்தை இயக்கியிருந்த சிபி சக்ரவர்த்தியை விஜய் சந்தித்தாக கூறப்படுகிறது.
விஜய் அவருக்காக சிபி சக்ரவர்த்தியிடம் கதையை உருவாக்க சொன்னதாகவும் இதற்காக சிபி சக்ரவர்த்தி திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
நடிகை நீது சந்திராவை சம்பளத்திற்காக மனைவியாக இருக்க சொன்ன நபர் ! - அதிர்ச்சியளிக்கும் பேட்டி