நடிகை நீது சந்திராவை சம்பளத்திற்காக மனைவியாக இருக்க சொன்ன நபர் ! - அதிர்ச்சியளிக்கும் பேட்டி
நடிகை நீது சந்திரா
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை நீது சந்திரா, இவர் தமிழில் யாவரும் நலம், திராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கோலிவுட்டில் பிரபலமானார்.
மேலும் அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் “என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதை. 2005-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய 12-க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.
ஆனால் இன்றைக்கு எனக்கு வேலை இல்லை. இதனால் பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிட்ம் மாதம் ரூ.25 லட்சத்தில் சம்பள மனைவியாக இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இப்போது என்னிடம் பணமோ, வேலையோ இல்லை. மிகவும் கவலையாக உள்ளேன்.
இத்தனைப் படங்களில் நடித்த பிறகும் நான் இங்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன். முன்னணி இயக்குநர் ஒருவர் என்னை பட ஒத்திக்கைக்கு அழைத்திருந்தார். ஒத்திகை முடிந்து ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்துவிட்டார்.
ஹாலிவுட்டில் நான் யாரது துணையும் இல்லாமல் நுழைந்ததை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதோடு அவர்களால் நம்ப முடியவில்லை.
இதற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்கூட பல முறை எனது மனதில் வந்து சென்றது” என தனது தற்போதைய நிலை குறித்து கண்கலங்கிய படி பேசியுள்ளார் நடிகை நீது சந்திரா.
நடிகர் அருண் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தானாம்.. யார் தெரியுமா