ப்ளாக் பஸ்டர் குடும்பஸ்தன் படத்தின் வசூல் விவரம்.. இதோ
குடும்பஸ்தன்
லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் துவக்கமே இப்படத்தின் மூலம் அமோகமாக அமைந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
மேலும் மணிகண்டனின் வெற்றி பயணமும் தொடர்கிறது. ஆம், 2023ல் குட் நைட், 2024ல் லவ்வர் அதனை தொடர்ந்து 2025ல் குடும்பஸ்தன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
யதார்த்தமான கதைக்களத்தில், மக்களின் மனதை தொடும் வகையில் அமைந்திருந்த இப்படம் உலகளவில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், குடும்பஸ்தன் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று வாரங்களை வெற்றிகரமாக கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாகும்.

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu
