நடிகர் ஜாபரை தவறாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்.. குவியும் எதிர்ப்புகள்
ப்ளூ சட்டை மாறன்
Youtubeல் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். எந்த படம் வெளிவந்தாலும், இவருடைய விமர்சனம் எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்கள் பலரும் காத்திருப்பார்கள்.
அப்படி நேற்று வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.
படத்தை பற்றி நன்றாக விமர்சனம் கூறியுள்ள இவர், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜாபரை தவறாக விமர்சனம் செய்துள்ளார்.
தவறான விமர்சனம்
இதில் ப்ளூ சட்டை மாறன் கூறுகையில் 'விக்ரம் படத்தில் வருவாரே குட்டியா லில்லிபுட் மாதிரி, Mini Quarter மாதிரி ' என்று நடிகர் ஜாபரை அடையாள படுத்தியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறன் இன்னும் திருந்தேவே இல்லையா என்று கூறிய கடுமையாக தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு படத்தை விமர்சனம் செய்வது சரி, ஏன் ஒருவரின் உடலை தவறாக ஆடையாளம் காட்டி பேசுகிறீர்கள். இனிமேலாவது இதை செய்யாதீர்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
