2022 ஆண்டு அதிக பிளாப் படங்களை கொடுத்த ஹீரோ: ப்ளூ சட்டை உடன் மோதிய நடிகர்
நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான "சூது கவ்வும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் அசோக் செல்வன்.
தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், வேழம், ஹாஸ்டல், நித்தம் ஒரு வானம் என ஐந்து படங்கள் வெளியானது.
பிளாப் பட்டியல்
இந்நிலையில் திரை விமர்சகர் மற்றும் இயக்குனரான ப்ளூ சட்டை மாறன் தற்போது இந்த ஆண்டு அதிக பிளாப் படங்கள் கொடுத்த நடிகர்கள் என பட்டியல் போட்டு ட்வீட் செய்துள்ளார்.
அந்த பட்டியலில் அசோக் செல்வன் தான் அதிக படங்களை பிளாப் கொடுத்தார் என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் vs அசோக் செல்வன்
இதைதொடரந்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட பட்டியலுக்கு சிலர் எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் " குரைக்கும் நாயை கண்டுகொள்ளாமல் முன்னேறி செல்வோம்" என ட்வீட் செய்துள்ளார் அசோக் செல்வன்.
Ignore the barking dogs and keep moving forward ? #SelfMade pic.twitter.com/bN9ywnw4P4
— Ashok Selvan (@AshokSelvan) December 17, 2022
அவதார் 2 படம் பார்த்த நபர் தியேட்டரில் மரணம்! அதிர்ச்சி சம்பவம்