BOAT திரை விமர்சனம்
எப்போதும் வித்தியாசமான களத்தை தேர்ந்தெடுத்து பல சுவாரஸ்ய கதாபாத்திரங்களுடன் காமெடி கலந்து எடுப்பதில் வல்லவரான சிம்புதேவன், தற்போது யோகிபாபு மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்கியுள்ள போட் திரைப்படம் எப்படியுள்ளது, பார்ப்போம்.
[L3HF5S
கதைக்களம்
1943 இந்தியா ப்ரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருக்க, அப்போது ஹிட்லரால் இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது. அப்படி போர் தொடங்கிய நேரத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் உள்ள இடங்களில் ஜப்பான் பாம் போட ஆரம்பிகிறது.
இதில் சென்னையிலும் பாம் போட போகிறார்கள் என ஒரு செய்தி பரவ, உடனே யோகி பாபு தன் பாட்டியுடன் போட்-ல் ஏறி கடலுக்குள் சென்று தப்பிக்க நினைக்கிறார்.
அதே நேரத்தில் அவருடன் சேர்ந்து 7 பேர் ஏற, கடலுக்குள் செல்ல, அங்கு ஒரு ப்ரிட்டிஷ் போட் ஜப்பானால் தாக்கப்பட்டு ஒரு ப்ரிட்டிஷ் போலிஸும் அதில் ஏறுகிறார்.
பிறகு அந்த பிரிட்டிஷ் போலிஸுக்கு அந்த போட்-ல் ஒரு தீவிரவாதி இருக்கிறார் என்ற தகவல் வர, போட்-ம் உடைந்து கொஞ்சம் கொஞ்சமாக போட் உள்ளே தண்ணீர் வர ஆரம்பிக்க, இதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
யோகிபாபு காமெடி கதாபாத்திரங்களுக்கு பாய் சொல்லிவிட்டு கதையின் நாயகனாகவே நடிக்கலாம் போல, அந்தளவிற்கு எமோஷ்னலாகவும் ஸ்கோர் செய்கிறார்.
ஒரு படகில் ராஜஸ்தான் சேட்டு, முஸ்லீம் இளைஞன், மயிலாப்பூர் பிராமன பேமிலி, தெலுங்கு பேமிலி, தென் தமிழக ஆள், ஒரு வெள்ளைக்காரர் பிறகு சென்னை பூர்வகுடி யோகி பாபு, அவர் அப்பத்தா என அனைத்து தரப்பு மக்களின் எமோஷ்னலையும் படபிடித்துள்ளார் சிம்புதேவன்.
தீவிரவாதி என்று சி ஐ டி எம்.எஸ்.பாஸ்கர் கண்டிப்பிடிக்க போய், கடைசியில் வரும் டுவிஸ்ட் அதை தொடர்ந்து போட்-லிருந்து விழும் பாம், கடலில் சுத்தும் சுறா, மூவர் போட்-ல் இருந்து இறங்க வேண்டும், அல்லது அனைவரும் சாக வேண்டும் என்று பரப்ரப்பின் உச்சம் உள்ளது கதை.
ஆனால், திரைக்கதை அவ்வளவு பரபரப்பை எங்கையும் அடையவில்லை, அங்கங்கு சிம்புதேவன் ஸ்டைலில் ஒரு ப்ரீயட் செட்-ப்பில் இந்த கால வளர்ச்சியின் விளைவுகளை, எடுத்துக்காட்டாக, கொரொனா, ஜொமேட்டோ போன்ற விஷயங்களை கிண்டல் அடிப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால், பல இடங்கள் கான்வெர்சேஷனால் இருந்தாலும் ஒரு டைம்-ற்கு மேல் அட போதும்ப்பா என்று நமக்கே தோன்ற வைத்து விடுகின்றனர்.
யார் போட்-லிருந்து இறங்குவார்கள், யார் காப்பாற்றப்படவேண்டும் என்ற பதட்டமே இல்லை. அதோடு பூர்வீக மக்களின் நிலை இன்றும் மாறவில்லை என்ற அழுத்தமான கருத்துக்கு, காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை.
படம் முழுவதும் ஒரு போட் என்பதால் அதற்கான செட், ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்களுக்கான மெனக்கெடலுக்கு சபாஷ்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம், சுவாரஸ்யமாக உள்ளது.
படத்தில் ஆங்காங்கே வரும் Sarcasm, சிம்புதேவன் ஸ்கோர் செய்கிறார்.
பல்ப்ஸ்
பரபரப்பான கதை என்றாலும் அதை திரைக்கதையில் கொண்டு வருவதில் கொஞ்சம் சறுக்கியுள்ளனர்.
மொத்தத்தில் போட்-ல் இருந்தவர்களின் பரிதவிப்பு ஆடியன்ஸிடம் கடுத்துவதில் கொஞ்சம் சறுக்கியதால் இந்த போட் தத்தளித்துக்கொண்டே உள்ளது.