இந்தியன் 2 ஹீரோயின் மாற்றம்! கஜால் அகர்வாலுக்கு பதில் இவரா?
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கிரேன் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்தியன் 2
கிரேன் விபத்துக்கு பிறகு லைகா மற்றும் ஷங்கர் இடையே தொடங்கிய பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது.
தற்போது ஷங்கர் தெலுங்கில் RC15 படத்தை ராம்சரணை வைத்து எடுத்து வருகிறார். அந்த படத்தை முடித்தபிறகு தான் அவர் இந்தியன் 2 படத்தை தொடங்க இருக்கிறார்.
தற்போது கமல்ஹாசனும் அமெரிக்காவிற்கு இந்தியன் 2 படத்தின் பணிகளுக்காக தான் சென்று இருக்கிறார் என தெரிகிறது.
காஜலுக்கு பதில் இவரா
இந்தியன் 2ல் கமலுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டு குழந்தைக்கு தாயாகிவிட்டார். அதனால் அவர் படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி காஜல் அகர்வாலுக்கு பதில் வேறொரு முன்னணி பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
தீபிகா படுகோன் அல்லது கத்ரீனா கைப் இந்தியன் 2ல் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
