விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்..
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், கமலுடன் முன்னணி நட்சத்திர இணைந்து நடித்து இப்படம் உலகளவில் ரூ,400 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது.
வரலாறு காணாத வெற்றியடைந்துள்ள விக்ரம் திரைப்படம் இந்தளவிற்கு வரவேற்பை பெற முக்கிய காரணமாக இருப்பது இயக்குநர் லோகேஷின் LCU தான்.
அவரின் திரைப்படங்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படம் கொண்டு வந்தது போல இனி அவரின் அடுத்த திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் LCU2-வில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாலிவுட்டின் யுனிவர்ஸ்
இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு புதிதான இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் விரைவில் பாலிவுட்டிற்கும் செல்ல இருக்கிறது. ஆம், YRF நிறுவனம் தயாரிப்பில் வெளியான படங்களின் கதாபாத்திரங்கள் விரைவில் இணையவுள்ளது.
சல்மான் கான், ஷாருக் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர்கள் அவர்களின் திரைப்படங்களின் கதாபாத்திரங்களை வைத்து ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளனர்.
அதன்படி Tiger3, Pathaan, War உள்ளிட்ட திரைப்படங்களில் அவர்கள் SPY-யாக நடித்துள்ளனர். எனவே SPY UNIVERSE-ஆக உருவாகவுள்ள அப்படம் 2024 - 2025-ல் வெளியாகும் என பாலிவுட்டில் பரபரப்பாக தகவல் பரவி வருகிறது.

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
