வசூலை வாரி குவிக்கும் மம்மூட்டியின் பிரம்மயுகம்!! வசூல் விவரம் இதோ
பிரம்மயுகம்
சமீபகாலமாக வெளியாகும் தமிழ் படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. இந்த காரணத்தால பழைய படங்களை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் மலையாள சினிமாவோ நாளுக்கு நாள் சினிமா ரசிகர்களை வியக்கவைக்கிறது. ஏன் என்றால் புதிய கதைகளம், experimental படங்கள் எனஇப்படி எதாவது ரசிகர்களை கவரும் விதம் எடுக்கின்றனர்.
சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி பிரம்மயுகம் படம் வெளியானது.
வசூல்
மாந்திரிகம் மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதில் கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்து இருப்பார்.
இந்நிலையில் பிரம்மயுகம் படத்தின் வசூல் விவரம் பற்றி ய தகவல் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
