ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிரதர்
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி அனைவரையும் ரசிக்க வைப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் பிரதர்.
எம். ராஜேஷ் இயக்கத்தில் முதல் முறையாக ஜெயம் ரவி நடித்த இப்படத்தில் அவருடன் இணைந்து பூமிகா, பிரியங்கா மோகன், நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
வசூல்
இந்த நிலையில், ஜெயம் ரவியின் பிரதர் படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க. தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த பிரதர் படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எந்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் மக்கள் மத்தியில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
