முதல் நாள் கேப்டன் மில்லர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கேப்டன் மில்லர்
தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பட்டையை கிளப்பும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜி.வி. பிரகாஷின் இசையும் அமைந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தெரியவந்துள்ளது.
முதல் நாள் வசூல்
அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
