தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இப்படியொரு ட்விஸ்ட் - காத்திருக்கும் சர்ப்ரைஸ்
கேப்டன் மில்லர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேப்டன் மில்லர்" படத்தில் நடித்து வருகிறார்.
இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷின் பிறந்த நாளான ஜூன் 28ம் தேதி "கேப்டன் மில்லர்" படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
லேட்ட்ஸ்ட் அப்டேட்
இந்நிலையில் தற்போது இந்த படம் 3 பாகங்களாக உருவாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை வரலாற்று பாணியில் உருவாகி வருகிறது என கூறப்பட்டது. அதன் காரணமாக இப்படம் 3 காலங்களாக பிரித்து படமாக படுகிறது.

முதல் பாகம் 1940களில் நடக்கும் நிகழ்வுகள் கொண்டதாகவும் இரண்டாம் பாகம் 1990களில் நடக்கும் நிகழ்ச்சியாகவும் மூன்றாம் பாகம் இன்றைய காலகட்டத்தில் நடப்பது போல அமையப்பெறும் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதனை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் முடிவுக்கு வருகிறது சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்