ஈழப் போராட்டக் கதையை இங்கே எடுக்க முடியாது!! கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேட்டி
கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படம் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
பேட்டி
கேப்டன் மில்லர் திரைப்படம் ஈழத்தில் போரில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டதில் நடந்ததை போல காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அருண் மாதேஸ்வரன், ”கடந்த 1987ம் ஆண்டு ஈழத்தில் நடந்த போரில் முதல் கருப்பு புலி கேப்டன் மில்லர் இறந்தது தான் இந்த படத்தின் கதை. ஆனால் தமிழ் நாட்டில் அப்படி எடுக்க முடியாது”.
“அதன் காரணமாக தான் சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கு கதையை மாற்றி அமைத்துவிட்டேன். சிங்களர்களுக்கு பதிலாக ஆங்கிலேயர்களை வில்லனாக மாற்றிவிட்டேன்" என்று அருண் மாதேவாரண் தெரிவித்து உள்ளார்.