கேப்டன் திரைவிமர்சனம்

By Kathick Sep 08, 2022 03:40 AM GMT
Report

டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சக்தி சௌந்தரராஜன் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன். எப்போதும் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் சக்தி சௌந்தரராஜன் இம்முறையும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் எடுத்திராத க்ரியேச்சர் படத்தை இயக்கியுள்ளார். சக்தி சௌந்தரராஜனின் வித்யாசமான முயற்சி, ஆர்யா நடிப்பு, முதல் க்ரியேச்சர் படம் என கேப்டன் படத்தின் மீது மாபெரும் அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்பை கேப்டன் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்

பல பாதுகாப்புடன் எங்கு ஒளித்திருந்தாலும், அவன் எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் தன்னுடைய டீம் மூலம் திறன்பட செயலப்பட்டு எதிரியை வீழ்த்துகிறார் ஆர்யா { வெற்றிச்செல்வன் }. ஆர்யாவின் தலைமையில் செயல்படும் இந்த தலைசிறந்த டீமில் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ், காவ்யா ஷெட்டி ஆகியோர் உள்ளனர்.

பல சவால்களை எதிர்கொண்ட இந்த டீமிடம் ஒப்படைக்கப்படும் மிஷின் தான் செக்டர் 42. மினரல் தொழிற்சாலை காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டு, மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும் செக்டர் 42 இடத்தை மீண்டும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனை முறையாக கவனித்து No Objection Certificate தரும்படி இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேப்டன் திரைவிமர்சனம் | Captain Movie Review

இதனால் ஆர்யாவின் டீம் உள்ளே செல்வதற்கு முன் மற்றொரு கேப்டன் தலைமையில் ஐவர் கொண்ட டீம் செக்டர் 42 உள்ளே சென்றது. ஆனால், திரும்ப வரவில்லை. அவர்கள் மட்டுமின்றி செக்டர் 42 உள்ளே சென்ற பல நபர்கள் மீண்டும் திரும்ப வரவில்லை என்று ரெக்கார்ட்ஸ் உள்ளது. இதனால், இந்த சவாலான காரியத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ளும் ஆர்யா தனது டீமுடன் முதல் முறையாக உள்ளே செல்கிறார்.

செக்டர் 42 உள்ளே செல்லும் ஆர்யாவையும் அவரது டீமையும் வினோதமான க்ரியேச்சர் ஒன்று தாக்குகிறது. இதன்பின் ஆர்யாவின் டீமுக்கு என்ன நடந்தது? ஆர்யாவின் கண்ணில் பட்டது என்ன? அதை எப்படி தனது டீமுடன் எதிர்கொண்டார்? கடைசியில் உண்மையில் செக்டர் 42வில் நடந்தது என்ன? என்பதே கேப்டன் படத்தின் மீதி கதை..  

படத்தை பற்றிய அலசல்

வழக்கம் போல் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்பில் குறை வைக்காமல் நடித்துள்ளார் ஆர்யா. அவருடைய கம்பீரமான தோற்றம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இராணுவ வீரனாக அருமையாக நடித்துள்ளார். ஆர்யாவுடன் நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் கதாபாத்திரம் சில காட்சிகள் வந்தாலும் படத்திற்கு தேவையானதாக அமைந்துள்ளது. கோகுல்நாத், பரத் ராஜ், காவ்யா ஷெட்டி ஆகியோரின் நடிப்பு பக்கா.

கேப்டன் திரைவிமர்சனம் | Captain Movie Review

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ரன், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்துள்ளார். கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார். அதனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு ஸ்கோப் இல்லை.

John McTiernan இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு அர்னால்டு நடிப்பில் வெளிவந்த பிரிடேட்டர் படத்தை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. எப்போதும் தன்னுடைய படத்தில் சுவாரஸ்யத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளும் இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இந்த முறை முழுவதுமாக சொதப்பியுள்ளார்.

எடுத்துக்கொண்ட கதைக்களம் நன்றாக இருந்தாலும், 2 மணி நேர படத்தில் ரசிகர்கள் எக்ஸைட் செய்யும் அளவிற்கு ஒன்றுமே இல்லை. 1987ஆம் ஆண்டு வெளிவந்த பிரிடேட்டர் படத்தில் இருந்த சுவாரஸ்யம் கூட 2022ஆம் ஆண்டு வெளிவந்துள்ள கேப்டன் படத்தில் இல்லை. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

கேப்டன் திரைவிமர்சனம் | Captain Movie Review

VFX சொதப்பலோ சொதப்பல். எதிர்பார்த்த அளவிற்கு கொஞ்சம் கூட VFXல் நம்பக தன்மை இல்லை. எதோ கார்ட்டூன் படம் பார்ப்பது போல் VFX அமைந்திருந்தது. புதிதாக முயற்சி செய்ததற்கு இயக்குனர் சக்தி சௌந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள். டி. இமானின் பாடல்கள் ஓரளவு ஓகே. பின்னணி இசை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்க்கு பலம். பிரதீப் இ. ராகவ்வின் எடிட்டிங் ஓகே. சண்டை காட்சிகளை இன்னும் கச்சிதமாக செய்திருக்கலாம்.   

பிளஸ் பாயிண்ட்

ஆர்யாவின் நடிப்பு

கதைக்களம்

மைனஸ் பாயிண்ட்

இயக்கம், திரைக்கதை

ரசிகர்கள் எக்ஸைட் செய்யும் அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை

1987ஆம் ஆண்டு வெளிவந்த பிரிடேட்டர் படத்தில் இருந்த சுவாரஸ்யம் கூட, 2022ஆம் ஆண்டு வெளிவந்துள்ள கேப்டன் படத்தில் இல்லை

VFX சொதப்பல்

மொத்தத்தில் ரசிகர்களை கடுப்பேற்றி ஏமாற்றியுள்ளது கேப்டன்..

கேப்டன் திரைவிமர்சனம் | Captain Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US