கலகலப்பான நடிகர் ஆர்யா பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்கள்- ஓர் பார்வை
நடிகர் ஆர்யா
சினிமாவில் நிறைய நடிகர்கள் வருவார்கள், போவார்கள் ஆனால் சிலரே மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.
அப்படி 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாகி இருக்கிறார் ஆர்யா.
நாயகனாக நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் அதைவிட நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எல்லா நடிகர்களுடனும் எப்போதும் சகஜமாக பழகக்கூடியவர்.
சரி இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பார்ப்போம்.
சினிமாவில் நுழைவதற்கு முன் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி இருக்கிறார். இவரது தந்தை கால்பந்து விளையாட்டு வீரர் மற்றும் ரெஸ்டாரன்ட் ஓனராவார்.
நடிகர் ஆர்யா Vätternrundan Motala cycle race என சைக்கிள் ரேஸ்களில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கியிருக்கிறார். இவரது தம்தி சத்யா தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகினார், ஆனால் அடுத்தடுத்து நடிக்கவில்லை.
கேரளாவில் பிறந்த இவரது நிஜ பெயர் Jamshad Cethirakath, சினிமாவிற்கு பின் ஆர்யா என மாற்றினார். மலையாளியாக இருந்தாலும் அந்த மொழியில் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.
2010ம் ஆண்டு The Show People என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
நான் கடவுள் படத்திற்காக 18 நாட்களில் அகோரி யோகாவை கற்றுக்கொண்டிருக்கிறார். அண்ணா நகரில் Sea Shell என்ற ரெஸ்டாரண்டை வைத்துள்ளார்.
நடிகை சயீஷாவை 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்யாவிற்கு 2021ம் வருடம் பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நடிகர் ஆர்யா விலையுயர்ந்த அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்தன.
டாப் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
