கார்மேனி செல்வம் திரை விமர்சனம்

By Tony Apr 05, 2026 12:40 PM GMT
Report

சமுத்திரகனி, கௌதம் மேனன், லட்சுமி ப்ரியா நடிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் வெளிவந்துள்ள கார்மேனி செல்வம் படம் எப்படி? பார்ப்போம்.

கதைக்களம்

சமுத்திரகனி அழகான குடும்பம், நிறைவான வாழ்க்கையுடன் கௌதம் மேனனிடம் கார் ட்ரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த நேரத்தில் கௌதம் மேனன் ஒரு சில நாட்கள் வெளியூர் பயணம் செல்கிறார்.

அப்படி அவர் வெளியூர் சென்ற நேரத்தில், அவர் கார்-யை கால் டாக்ஸியாக மாற்றி சமுத்திரகனி காசு பார்க்க ஆரம்பிக்கிறார், அதோடு வரும் பணத்தை வைத்து நிறைய செலவும் செய்ய தொடங்குகிறார்.

இந்த ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகிய சமுத்திரக்கனி நிறைய செலவு செய்து, பெரும் சிக்கல்களில் மாட்ட, அதிலிருந்து எப்படி மீண்டார், இந்த ஆடம்பர செலவு எங்கு கொண்டு செல்கிறது என்ற அழுத்தமான கருத்து சொல்வதே கார்மேனி செல்வத்தின் மீதிக்கதை.

கார்மேனி செல்வம் திரை விமர்சனம் | Carmeni Selvam Movie Review

படத்தை பற்றிய அலசல்

சமுத்திரகனி சொல்லவே வேண்டாம், அப்படியே மிடில் க்ளாஸ் மைண்ட் செட்-யை பிரதிபலிக்கும் கதாபாத்திரம், அதை மிக அழகாக செய்துள்ளார், அதிலும் ஆடம்பர செலவால் அவர் சிக்கும் பிரச்சனைகள் அதிலிருந்து மீண்டு வர அவர் போரடுவது என மனுஷன் கலக்கியுள்ளார்.  

படத்தில் சமுத்திரகனிக்கு இணையாக குடும்ப பெண்ணாக லட்சுமி ப்ரியா, மிரட்டியுள்ளார், அவ்வளவு யதார்த்தமான நடிப்பால் நம் கண் முன் மிடில் க்ளாஸ் பெண் யார் என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார்.

கௌதம் மேனன் வழக்கம் போல் அளவான நடிப்பு, ஆர்பாட்டம் இல்லாத வசனம் மூலம் ஈர்க்கிறார். அவர் மனைவியாக வரும் அபிநயாவும் மனதை ஈர்க்கிறார்.

படத்தின் பலமே இந்த கால மிடில் க்ளாஸ் வாழ்க்கைதை அப்படியே காட்டியது தான், அதிலும் இருப்பதை விட்டு பணதேவைக்காக பறப்பதை வாங்க ஆசைப்படும் மிடில் க்ளாஸ் மக்கள் பணத்தின் தேவை எவ்வளவு முக்கியம் என அவர்களுக்கு காட்டிய விதத்திற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

அதே நேரத்தில் இந்த ஜானர் படங்கள் விசு. வி.சேகர், டி பி கஜேந்திரன் அவர்களின் படங்களில் நாம் பார்த்து இருந்தாலும், அவர்கள் இதை என்கேஜ் செய்ய காமெடி என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள், அது எல்லோரிடமும் அந்த கருத்தை கொண்டு செல்லும்.

ஆனால், இதை கடைசி வரை சீரியஸ் டோனிலே கொண்டு சென்றதை தவிர்த்து இருக்கலாம், குறிப்பாக படத்தின் நீளம் கொஞ்சம் குறைத்தும் இருக்கலாம்.

படத்தின் ஒளிப்பதிவு அழகாக இருந்தது, இசை பின்னணி அருமை, பாடல்கள் ஏதும் ஈர்க்கவில்லை.

க்ளாப்ஸ்

சமுத்திரகனி, லட்சுமி ப்ரியா யதார்த்த நடிப்பு.

சொல்ல வந்த கருத்து

கிளைமேக்ஸ் வசனங்கள்

பல்ப்ஸ்

ரொம்ப சீரியஸ் களத்திலேயே சென்றது

படத்தின் நீளம்

மொத்தத்தில் இந்த கார்மேனி செல்வத்திடம் சில குறைகள் இருந்தாலும், அவர் சொல்ல வந்த கருத்துகாகவே கண்டிப்பாக பார்க்கலாம்.  

ரேட்டிங்: 2.75/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US