நடிப்பை தாண்டி ஹோட்டல் தொழில் மூலம் சம்பாதிக்கும் பிரபலங்கள்.. யார் யார், இதோ லிஸ்ட்
தமிழ் சினிமா
சினிமா, பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது.
மக்களை கவரும் வண்ணமும் நிறைய நிறைய படங்கள் வெளியாகின்றன. தீபாவளி ஸ்பெஷலாக அமரன், பிரதர், பிலடி பெக்கர், லக்கி பாஸ்கர் போன்ற நிறைய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
சினிமா பிரபலங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சொந்த தொழிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி ஹோட்டல் தொழில் மூலம் சம்பாதிக்கும் பிரபலங்களின் லிஸ்ட் பார்ப்போம்.

பிரியா பவானி ஷங்கர் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களை கவர்ந்த இவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார் இவர் சென்னையில் லயம்ஸ் டின்னர் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார்.
சிம்ரன் நடனத்தில் இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வரும் சிம்ரன் சென்னை சோழிங்கநல்லூரில் Godka By Simran என்கிற உணவகம் வைத்துள்ளார்.
சூரி காமெடியனாக கலக்கிவரும் சூரியின் ஹோட்டல் குறித்து அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அவர் மதுரையில் சொந்தமாக அம்மன் உணவகம் வைத்துள்ளார்.
கருணாஸ் சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கும் கருணாஸ் மனைவியுடன் இணைந்து சில ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.
ஜீவா ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என கூறி மக்களிடம் ரீச் ஆன ஜீவா ஒன் எம்பி என்கிற உணவகம் வைத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என எந்த ஒரு பிரபலங்களின் விசேஷம் என்றாலும் அங்கு இப்போதெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையல் குழுவுடன் இருக்கிறார். இவர் அமெரிக்காவில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.
ஆர்யா
எப்போதும் ஜாலியாக இருக்கக்கூடிய நடிகர் ஆர்யா ஷீ ஷெல் எனப்படும் உணவகத்தை சென்னை வேளச்சேரி மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நடத்தி வருகிறார்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா Manithan